பொங்குங்கடல் ஓடி மண் தொடுகையில்,
என் கால் நகம் தொடுகின்றது
போல்
விளைநிலம் நீர் பாய்ந்து,
விதை விண்ணை தொடுகின்றது
போல்
அருங்காலை சூரியன் உதித்தொரு
கதிர் என் கண் தொடுவது போல்
தித்திக்கும் செங்கனிச்சுவை
என் நாநுனி ருசிப்பது போல்
தேனூறிய வானம்
செங்கடலை தழுவுவது போல்
உயர்ந்தோங்கி தனித்திரும்
தென்னை வான் படர்வதை போல்
கருமேகம் கனிந்து முதல்
துளி தரை தொடுவது போல்
பண் ஒழுகு பரதக்கலை
என் கண் கரைந்தது போல்
என் திரு இம்மணெங்கும்
விதைத்த பொருள்
என் கண் உருத்தி கவிதை
செய்தது.
Comments
Post a Comment
Speak your mind